• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் கண்காட்சி துவக்கம் – மார்ச் 9-ம் தேதி நடைபெறகிறது

March 7, 2026 தண்டோரா குழு

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்பேர் 2026 துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது. கண்காட்சியை ராம்கோ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் பி. அஷ்வின் சந்திரன் தொடக்க விழாவிற்கு தலைமை தாங்கினார். மத்திய MSME அமைச்சகத்தின் இயக்குனர் எஸ்.சுரேஷ் பாபுஜி மற்றும் ஷலீன் தோஷ்னிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சைமா துணைத் தலைவர் எஸ். கிருஷ்ணகுமார் கூறுகையில்,

டெக்ஸ்ஃபேர் 2026 கண்காட்சியில் 240 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.தமிழ்நாடு, மகாராஷ்டிரா,குஜராத்,கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும்,சில யூனியன் பிரதேசங்களிலிருந்தும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 258 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைமா தலைவர் துரை பழனிசாமி வரவேற்று பேசுகையில்,

“சவால் சூழ்நிலைகளில் மில்களின் நிலுவையில் உள்ள ஒரு பிரச்சனை, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி. பருத்தி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறி வருகிறது.குறைந்தபட்ச ஆதார விலை அளித்து விவசாயிகளை அரசு பாதுகாத்து வருகிறது.சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்திய பருத்தி யின் விலை 20 அதிகமாகவே உள்ளது.இந்தியா பருத்தியில் தற்சார்பு நாடாக மாறுவதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகும்.வெளிநாட்டு பஞ்சின் மீது இறக்குமதி வரியை குறைத்தால் மட்டுமே, மில்கள் பயனடையும்.

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட திடீர் போரால் இந்திய ஏற்றுமதியை பெருமளவில் பாதித்துள்ளது. போர் சூழல் நீடிக்குமானால், பண மதிப்பிழப்பு, இறக்குமதியை பாதிக்கும்.சரக்குகளை அனுப்புவது 25 நாட்களுக்கும் மேலானால், இன்சூரன்ஸ், போக்குவரத்து கட்டணம், கண்டெய்னர் தட்டுப்பாடு, கப்பல்கள் கிடைப்பது போன்ற சவால்கள் ஏற்படும். கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் போது, விலை உயர்வு, பாலியெஸ்டர் நூலிழை பற்றாக்குறை நிலவும். போர் விரைவில் முடிந்து அமைதி திரும்ப வேண்டும். இந்திய ஜவுளித்துறைக்கு இரட்டை இலக்க வளர்ச்சி விரைவில் ஏற்பட வேண்டும்,” என்றார்.

விருந்தினராக பங்கேற்று ராம்கோ குழுமத்தின் தலைவர் வெங்கட்ராம ராஜா பேசுகையில்,

“கடந்த சில ஆண்டுகளாகவே ஜவுளி துறையில் கடினமானதாக சூழ்நிலை நிலவுகிறது. தேவைகளில் ஏற்றத்தாழ்வு, விலையில் ஏற்றத்தாழ்வு, முதலீட்டின் மீது நிலையற்ற வருவாய் போன்ற சவால்கள் உள்ளன. கடினமான சூழ்நிலை அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்கும், ” என்றார்.

இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவர் அஸ்வின் சந்திரன் பேசுகையில்,

“ஜவுளி இயந்திரத் தொழில் கண்காட்சி, ஜவுளி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், தொழில்நுட்பங்கள், தானியங்கி முறைகளுக்கு மாற்றங்களை நேரடியாக அறிய வாய்ப்பாக அமைகிறது. தொழிற்சாலைகளை அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்புகளை வழங்குகிறது.

சர்வதேச அளவில் உள்ள போட்டிகளையும் அறிந்து தொழிலில் நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும். மத்திய அரசு அளித்துள்ள பல்வேறு திட்டங்களை அறிந்து ஜவுளித்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய ஜவுளிக் கூட்டமைப்புடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் உதவிகளையும் வழங்கி வருகிறது, ” என்றார்.

நிகழ்ச்சியில், சைமா துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். மத்திய சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்தின் இயக்குனர் சுரேஷ் பாபுஜி, இந்திய டெக்ஸ்டைல் இயந்திரஉதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கனகராஜ் பங்கேற்றார். சைமா இணை தலைவர் சிவராஜ் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க