April 8, 2020
தண்டோரா குழு
கோவையில் நடைப்பயிற்சி ரேஸ்கோர்ஸ் பகுதியை மூடியதால் சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்ய முடியாமல் அவதிக் குள்ளாகியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பந்தய சாலையிலுள்ள நடைபயிற்சி பகுதியை அடைக்கப்பட்டுள்ளன.இதனால் தினமும் பந்தய சாலையிலுள்ள நடைப்பயிற்சி சென்று பழகியவர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நடைபயிற்சி மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க சர்க்கரை நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர்.நடைபயிற்சி செய்ய முடியாததால் சிலருக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது இதனால் அவர்கள் தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க நிலை தள்ளப்பட்டுள்ளனர்.
உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் நடைபயிற்சி சென்றவர்களும் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். உடலுக்கு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அவர்கள் கஷ்டப்பட்டு குறைக்கப்பட்ட எடையும் அதிகரித்துள்ளது. தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஒரு நாள் இடைவெளி விட்டாலே அவர்களால் அடுத்த நாள் காலை அதே நேரத்தில் எழுந்திருக்க சிரமப்படுவார்கள் சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்ளும் எனவே நடைப்பயிற்சியை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு சிலர் தங்கள் வசிக்கும் பகுதியிலேயே காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.
அதேநேரத்தில் கொரோனா பரவும் வேலையில் நடைப்பயிற்சி முக்கியமல்ல உயிர்தான் முக்கியம் என்று மனநிலையில் பலர் நடைபயிற்சியை முழுமையாக கைவிட்டு தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.