November 4, 2020
தண்டோரா குழு
கோவை கடைவீதியில் தீபாவளிப் பண்டிகையின் ஷாப்பிங் மற்றும் விற்பனை காரணமாக கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது கொரோனா விதிமுறைகளை காற்றில் பறந்தது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது இதனை முன்னிட்டு கோவை கடைவீதியில் புத்தாடை விற்பனை சூடு பிடித்துள்ளது. கடைவீதி பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது.காலை முதலே பொதுமக்கள் கூட்டம் கடை வீதி முழுவதும் இருந்தது. அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒப்பணக்கார வீதி சாலை முழுவதும் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அதிகளவிலான கூட்ட நெரிசல் காரணமாக டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையம் கூட்செட் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.இதேபோல் காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, மற்றும் ஆர்எஸ் புரம் பகுதிகளில் தீபாவளி பண்டிகை விற்பனை ஜோராக நடந்தது. இந்த பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.குடும்பத்துடன் கடைவீதியில் குவித்த பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சாலையோரங்களில் பலர் கடை அமைத்து பெண்களுக்கான கம்மல் செயின். உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்தனர்.தளா்வுகளுடன் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சமூக விதிகளை கடைபிடிக்க முடியாமல் பலர் கடைவீதிகளில் தென்பட்டனர்.கோவை மாவட்டத்தில் கொரோனவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் இனிவரும் சனி, ஞாயிற்றுக்கிழமை இதனை விட அதிக அளவில் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான தடுப்பு நடவடிக்கையை கையாள வேண்டும் எனவும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வணிகர்கள் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.