June 6, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மாநகர காவல் துறையும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசும் இணைந்து சமுதாய காவல் பணி ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தியது.
இந்த சிறப்பு பயிற்சி முகாமில் நேரு கல்லூரி,KSG கல்லூரி,ஜெயேந்திர சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி,SNS கல்லூரி,KG,அரசு கலை கல்லூரி,மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிதாசன் பேசும் போது கோவை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் நூலகங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன் அதை உடனே நிறைவேற்றியுள்ளனர்.
மேலும்,இங்கு உள்ள செக்போஸ்ட்,மற்றும் இரவு ரோந்து பணி,போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில்,சிக்னல் போன்ற இடங்களில் போதிய காவலர் இல்லை,அதனை சரி செய்ய காவல்துறையுடன் சேர்ந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நண்பர்கள் ஈடுபட வேண்டும்.இதன் மூலம் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும், அதே போல் முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்,குற்றங்கள் நடைப்பெறாமலும் தடுக்கும் விதத்திலும் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்த ஒரு நாள் சிறப்பு சமுதாய காவல் பணி பயிற்சி முகாமில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா IPS,காவல் துணை ஆணையர் லட்சுமி IPS,போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் IPS,குற்றபிரிவு துணை ஆணையர் பெருமாள் IPS,மற்றும் உதவி ஆணையாளர் சுகுமார் காவல்துறை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சியை சினேக பெர்னாண்டஸ் ( பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்,சென்னை),செபாஸ்டியன் பால்ராஜ் (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்,சென்னை) ஆகியோர் அளிக்கின்றனர்.