• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சந்தன மரம் வெட்டிகடத்த முயன்றவர்கள் கைது

December 17, 2019

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களால் ஆங்காங்கே சந்தன மரக்கடத்தல் நடைபெற்று வருகின்றது. காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்ற சந்தன மர கடத்தல் காரர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் காந்திபுரம் சாய்பாபா காலனி போன்ற பகுதிகளில் சந்தன மர கடத்தல் காரர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கோவை மாநகரை சுற்றிவளைத்து ஆங்காங்கே சந்தன மரத்தை வெட்டி கடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் வனத்துறையினர் என அனைவரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சந்தன மரத்தை வெட்டு கின்ற சந்தன மர கடத்தல் கும்பலை இரண்டு மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் தப்பியோடிய நான்கு நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.பிடிபட்ட அவரிடமிருந்து சந்தன மரம் வெட்டுவதற்கு பயன்படக்கூடிய ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களை சாய்பாபா காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேலும் இருக்கின்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்..இன்று அதிகாலை பிடிபட்ட குற்றவாளிகள் கோவிந்தராஜ், திருப்பத்தூர் விஷ்ணு, ஜவ்வாது மலை அன்பு இவர்கள் மூவருமே திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் படிக்க