February 15, 2018
தண்டோரா குழு
கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சத்துணவு ஊழியர்கள் இரயில் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக,சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவல்துறையினர் சத்துணவு ஊழியர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ஒசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் உயிறற்றவர் போல படுத்து ஒப்பாரி வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட 250 சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.