• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபர் கைது

May 31, 2019 தண்டோரா குழு

கோவையில் சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபர் கைது

கோவையில் சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட கணபதி பகுதியில் பவளப்பாறைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனதுறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மேற்பார்வையில் WCCB மற்றும் கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனப்பணியாளர்க் குழுவினர் கணபதியை அடுத்துள்ள மணியகாரன்பாளையம் பகுதியில் தணிக்கை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த சரவணன்ல்என்பவர் தனது வீட்டில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க