• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயன்ற 5 பேரிடம் விசாரணை

December 18, 2019

கோவை கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயன்றதாக மூன்று பெண்கள் உட்பட 5 பேரை பிடித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மதுக்கரையை சேர்ந்த புரோக்கர் ஜாகீர் என்பவருக்கு குழந்தையை விற்க கருமத்தம்பட்டி வந்த போது ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் ஹசீனா, கல்யாணி ஆகியோர் பிடிபட்டனர். குழந்தையை விற்க மதுரையில் இருந்து வந்த கண்ணன் ஜோதி என்ற தம்பதியையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குழந்தை விற்பனை தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சூலூர் அருகே புரோக்கர்கள் ஹசீனா, கல்யாணி, ஜாகீர் ஆகியோர் சண்டையிட்டு கொண்ட போது பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை மீட்ட கருமத்தம்பட்டி போலீசார் குழந்தை விற்பனை குறித்து பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க