• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோவில் உண்டியலை உடைக்க முயற்சி

April 2, 2018 தண்டோரா குழு

கோவையில் இரு கோயில்களின் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் சக்தி மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்து உள்ளது. இந்நிலையில் நேற்று(ஏப் 1)நள்ளிரவு உள்ளே புகுந்த மர்ம நபர் முதலில் மாரியம்மன் கோயிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உள்ளார். பின்னர் அங்கு இருந்த அறையின் கதவை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்த அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்,கோயிலின் பூட்டை உடைக்க முயற்சி மேற்கொண்டு உள்ளார்.ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் உண்டியலில் இருந்த பணம் திருடு போகாமல் தப்பியது.இந்நிலையில் காலை கோயிலின் பூட்டை உடைத்ததை பார்த்த பூசாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கோயிலில் பதிவான சிசிடிவி கேமெரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோயிலின் உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி உள்ளது.என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.அது குறித்து தகவல்களை சேகரிக்கும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க