April 8, 2020
தண்டோரா குழு
மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் விதமாக கோவை அத்தர் ஜமாத் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக கோவில் உட்பட பல்வேறு இடங்களில் கொரானா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
உலக முழுவதும் கொரனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அத்தர் ஜமாத் வெல்ஃபேர் அசோசியேஷன்கோவை மாநகர பகுதியில் உள்ள உக்கடம் கோதா, ஆபீஸ் பேட், சிஎம்சி காலனி, b1 காவல் நிலையம், ராமர் கோவில் பகுதி, ஒப்பணக்கார வீதி உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசல், கோட்டைமேடு, போன்ற இடங்களில் மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் விதமாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் வினியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் சையது உசேன் அவர்கள் தலைமையில் செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் சபீர், அத்தார் ஜமாத் பொருளாளர் ஆஷிக் அலி, துணைத்தலைவர் பீர்முகமது, கமிட்டி உறுப்பினர் ஆஷிக் அஹமத், சாதிக், அன்வர், அனிபா,உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் நகர முழுவதும் இந்த பணியில் ஈடுபட்டனர்.