January 22, 2018
தண்டோரா குழு
கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி இன்று(ஜன 22)மனு அளித்தனர்.
கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக லட்சுமி நரசிம்மர் உருவத்தில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலட்சுமி நரச்சிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாகவும், இதனால் கோவில் பகுதியில் தூர்நாற்றம் வீசுவதாக கூறி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வேடத்தில் வந்து, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு அளித்தனர்.