• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை.

March 10, 2020

வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று ஆர்.எஸ்.புரத்தில் கொண்டாடப்பட்டது.

வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையில் மக்கள் அனைவரும் வண்ணப் பொடிகளை தொகுதி ஒருவருக்கு ஒருவர் பூசிக் கொண்டும் கொண்டாடுவது வழக்கம். இதை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வட இந்தியர்களும் கொண்டாடுவர். இந்த பண்டிகையானது கோபாலபுரத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி கொண்டும் அவர்களது கடவுளை வேண்டி பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர். இதனால் அப்பகுதியே வண்ண மயமாக காட்சி அளித்தது. ஒருவருக்கொருவர் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடியது அப்பகுதியை ஆனந்த மயமாக காட்சி அளித்தது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோனிகா ,

வருடம் வருடம் இந்த ஹோலி பண்டிகை அனந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் இம்முறை வட இந்தியர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியர்களும் தங்களுடன் சேர்ந்து இந்த போலி பண்டிகையை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதனால் எங்கள் இடையே நட்பு மிகவும் மலர்கிறது என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த வருடம் கொண்டாடப்படும் இந்த போலி பண்டிகையானது குறிப்பாக உலகமெங்கும் பரவி வருகின்றன கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற கடவுளை வேண்டி கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதன் பின் பேசிய ரேஷ்மா இந்த போலி பண்டிகையானது வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்கள் இருவரையும் இணைக்கும் விதமாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இது எங்கள் இடையே உள்ள ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் கூறினார்.

மேலும் படிக்க