• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொலை செய்யப்பட்ட அமுமுக கட்சி நிர்வாகி கொலையில் திருப்பம்

November 24, 2018 தண்டோரா குழு

தாசில்தார் முன்னிலையில் குற்றவாளி கொலை செய்து கிணற்றில் வீசிய இடத்தை அடையாளம் காட்டினார்.

கோவைக்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அமுமுக நிர்வாகி ஜெயவேணு காணாமல் போன வழக்கில் 50 நாட்களுக்கு பிறகு அவரது உறவினரும் நண்பனுமாகிய ராஜேஷ் என்பவனை துடியலூர் போலிசார் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது, மது போதையில் ஜெய வேணுவை சுத்தியலால் தலையில் அடித்து கொன்று அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றதாக ராஜேஷ் வாக்குமூலம் கொடுத்தார்.இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கிரேன் மூலம் கிணற்றில் உள்ள கொலை செய்யப்பட்ட ஜெயவேணு உடலை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஜேஷ் போலீசில் காவலில் எடுக்கப்பட்டு கிணற்றை வீசிய இடத்தை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து வந்தனர். அப்போது ஜெயவேணுவின் உறவினர்கள் அதிகம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.எஸ்.பி மணி தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜேஷ்சை துப்பாக்கி ஏந்திய போலீசாரால் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டான். தொடர்ந்து கோவை வடக்கு தாசில்தார் சிவக்குமார், கோவை மருத்துவ கல்லூரி மருத்துவர் ஜெயசீங் முன்னிலையில் குற்றவாளி ராஜேஷ் கொலை செய்யப்பட்டு பிணத்தை வீசிய கிணற்றின் இடத்தை அடையாளம் காட்டினான். அதனை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இருவர் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினர். தொடர்ந்து 5 மணி நேரமாக தேடியும் பிணம் கிடைக்காததால் அவர்கள் மேலே வந்தனர். அந்த இடத்திற்கு வந்த எஸ்.பி பாண்டியராஜனிடம் ஜெயவேணுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் போலிசார் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று புகார் கூறி அழுத்தனர்.

இதனையடுத்து எஸ்.பி அவர்களிடம் உங்களுக்கு உரிய பாதுக்காப்பும், விரைவில் ஜெயவேணுவின் உடலை மீட்க நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று கூறினார்.

மேலும் படிக்க