April 5, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையை பொறுத்தவரையில் ஏற்கனவே 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 29 பேர் கோவையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது