• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா நோயாளி மீது தாக்குதல்

February 3, 2022 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பாரதியாரோடு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் வீட்டில் இருந்தார். இவர் அழகு கலை ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.‌ இவருக்கும் இவரது உறவினரான எஸ் ரோன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக விரோதம் இருந்து வந்தது.

இளம்பெண் கொரோனா நோய் பாதிப்பில் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் எஸ் ரோன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து விவகாரம் தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தனர். இளம் பெண்ணை தாக்கி அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து நொறுக்கினர்.இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க