• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கின்றது – முதல்வர் பழனிச்சாமி

June 25, 2020 தண்டோரா குழு

இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிச்சாமி,

கொரோனா பாதிப்பு, தொழில் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, சுய உதவி குழுவினர் ஆகியவை குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் சிறப்பான முறையில் கொரொனா தடுப்பு பணிகள் நடைபெறுவதால் வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனவும் கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் 314 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் 112 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர். 10 பரிசோதனை மையங்களில் நாள் ஒன்றுக்கு 2000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகின்றது. கொரொனா தொற்று கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்றார்.

கோவை மாவட்ட விவசாயிகள் பல கோரிக்கைகளை முன் வைத்து இருக்கின்றனர் அவை நிறைவேற்றப்படும். வரும் 2020 டிசம்பருக்குள் அவினாசி அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிடும்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகளவு பாலத்தை கட்டிக்கொடுத்து இருக்கின்றோம். சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு 4125 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கடனுதவி பெற்று தரப்பட்டுள்ளது. செக்யூரிட்டி இல்லாமல் 125 கோடி ரூபாய் கடனுதவி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா விவகாரத்தில் எதுவுமே செய்யவில்லை என தவறான பொய்யான அறிக்கையினை திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்து வருகின்றார்.நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் ஸ்டாலின். அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்காமல் நாள்தோறும் வாடிக்கையாக ஒரு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் நோய் தடுப்பிற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனையை இதுவரை ஸ்டாலின் கொடுக்க வில்லை என தெரிவித்தார்.

மேலும் முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்புவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டு இருக்கின்றார் என கூறிய அவர், சொந்த செலவில் அதிமுக நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாக கூறினார்.
அதேபோல,வேண்டும் என்றே திட்டமிட்டு தினமும் பொய்யான செய்தியை ஸ்டாலின் கொடுத்து வருகின்றார்.இறப்பு சதவீதம் குறைந்து, குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. 90 நாட்கள் கடுமையாக உழைத்து இருப்பதன் காரணமாகவே நோய் தொற்றை கட்டுப்படுத்த முடிந்து இருக்கின்றது. 90 நாள் ஊரடங்கினை வீணாக்கி விட்டதாக பொய் குற்றச்சாட்டை திமுகவினர் வைக்கின்றனர். 90 நாள் ஊரடங்கில் முன் களப்பணியாளர்கள் முழுமையாக உழைத்ததால் நோய் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கொரோனா சோதனை நேரத்தில் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என கடுமையாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க