May 11, 2021
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் முதுநிலை காவலர் பாபு (எண்:1018 ) தனது ஒரு மாத சம்பள பணம் 25,788 ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கடந்த ஆண்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அதே போல இந்த ஆண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் தான் பணியாற்றி வரும் ஆயுதப்படை முதல் நிலை காவலர் பணியில் ஏப்ரல் மாத வழங்கிய முழு ஊதியம் ரூபாய் – 34,474/- ஐ முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஆயுதப்படை முதல்நிலை காவலரின் இந்த செயலை உயர் அதிகாரிகள், சக பணியாளர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.