June 7, 2021
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கென 240 படுக்கை வசதிகள் கொண்ட தனி மையத்தை கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மற்றும் பி.5 மற்றும் பலர் இணைந்து,தத்தெடுத்தனர்.
கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கென 240 படுக்கை வசதிகள் கொண்ட தனி மையத்தை கோயமுத்தூர் மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மற்றும் பி.5, இந்திய வர்த்தக சபை கோவை கிளை, ப்ரோபெல் இண்டஸ்ட்ரி சிம்டா, மெஸேர்ஸ் கட்டிங், ரவுண்ட் டேபிள், ரோட்டரி கிளப், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் பலர் இணைந்து, தத்தெடுத்து அதில் ஆக்சிஜன்,நோயாளிகளுக்கு உணவு வழங்குதல்,மருந்து மாத்திரைகள் மற்றும் செவிலியர்கள் வசதி போன்ற கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் இ.எஸ்.ஐ.மருத்தூவமனை டீன் மருத்துவர் ரவீந்திரன், கண்காணிப்பாளர் மருத்துவர் ரவிக்குமார் மற்றும் அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட ஆளுநர் கருணாநிதி
பி 5 ஆளுநர் குப்புசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
முன்னதாக பேசிய ஆளுநர் கருணாநிதி,
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட அரிமா சங்கம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக கோவை, திருப்பூர்,நீலகிரி உள்ளடக்கிய மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பசிப்பிணி போக்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று மூன்றாம் அலை வருவதற்கு முன்பாக தேவையான வசதிகளை செய்துதர உள்ளோம் என்றார்.
தொடர்ந்து மருத்துவமனை டீன் ரவீந்திரன் பேசுகையில்,
தமிழக அரசு கோவை மாவட்டத்தில் தனி கவனம் செலுத்தி,நான்கு அதிகாரிகளை நியமித்து நோய் தொற்றை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர்,அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், தற்போது படிபடிப்படியாக நோய் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அரிமா சங்க ,முதல் மற்றும் இரண்டாம் நிலை ஆளுநர்கள் ராம் குமார்,மோகன் குமார், ஜான் பீட்டர் அரிமா சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில் குமார், நக்கீரன் எஸ் கே எம் சுரேஷ் குமார் மற்றும் ரமணன் ,உட்பட அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் இந்திய வர்த்தக சபை கோவை கிளை ,மெசர்ஸ் கட்டிங்,புரொபல் இண்டஸ்ட்ரீஸ் சிம்டா, ரவுண்ட் டேபிள், ரோட்டரி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகிய நிறுவனம் மற றும் அமைப்புகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.