May 20, 2021
தண்டோரா குழு
கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு வார்டுகளை ஆய்வு மேற்கொண்டார்.கோவை கொடிசியா வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 253 படுக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.மேலும்,மற்றொரு ஏ ஹாலில் 220 படுக்கைகள் சித்தா மருத்துவ சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளது.அதையும் ஆய்வு மேற்கொண்டவர், சிகிச்சைகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஏற்கனவே,கொடிசியா வளாகத்தில் உள்ள 4 ஹாலில் டி மற்றும் இ ஹாலில் 1280 ல் 701 நிரப்பப்பட்டு 579 காலியாக உள்ள நிலையில், இது கொரோனா நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைய உள்ளது.மேலும், அங்கு, கிராமத்து பால் நிறுவனம் சார்பில், கொரோனா நோயாளிகள் 50 ஆயிரம் பேர் வீதம் 15 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் லிட்டர் பால்லை அந்நிறுவனம் வழங்க உள்ளது. அந்த பாலை தமிழக முதல்வர் பார்வையிட்டு, அதன் நிறுவனர் ஜனார்த்தனிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.