• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

April 17, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட 127 பேரில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் – நேற்று ஒரே நாளில் 12 பேர் வீடு திரும்பினர்.

கோவையில் கொரோனா நோய்த்தொற்று உடன் சிகிச்சை பெற்று வந்த 12 நபர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் பாதிப்புடன் 127 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் மருத்துவர், 10 மாத குழந்தை உள்ளிட்ட 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்றிரவு புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரொனா பாதித்த 12 பேர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைதட்டி ,பாராட்டி அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு குணமடைந்து அதற்கான பரிசோதனை நகலையும் கொடுத்து அனுப்பினர். மேலும் வருங்காலங்களில் 28 நாள் அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் பொது இடங்களில் அதிகமாக செல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கி மருத்துவர்களும் அதிகாரிகளும் வழியனுப்பி வைத்தனர். கொரோனா நோய்த்தொற்றில் தொடர்ந்து குணமடையும் எண்ணிக்கை கூடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கொரோனா நோய்த்தொற்று பீதி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவை ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 127 பேரில் 26 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் 101 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு வீடு திரும்புபாவர்கள் என் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க