• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரானா அறிகுறியுடன் தனிமைப் படுத்தப்பட்டவரின்‌ வீட்டுக்கு சென்றவர் கைது

April 11, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரானா அறிகுறியுடன் தனிமைப் படுத்தப்பட்டவரின்‌ வீட்டுக்கு சென்ற தமுமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தோடு, பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனோ அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, சுகாதாரத்துறை அவர்களை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியில் கொரோனோ அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டிற்கு கிணத்துக்கடவு தொகுதி தமுமுக நிர்வாகி பெரோஸ்கான் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய குனியமுத்தூர் போலீசார் குரோனோ அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட அவரின் வீட்டிற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தியும் பெரோஸ்கான் சென்றதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து பெரோஸ் கான் மீது 144 தடையுத்தரவை மீறுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நீதிபதி முன் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க