April 11, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பம் கொத்தடிமைகளாக மாட்டி தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்.இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அவசர தேவைக்காக அட்வான்ஸ் வாங்கிகொண்டு ஸ்பின்னிங் மில்லில் பணியில் இணைந்தனர்.கணவன் மனைவி இருவரும் கடந்த ஐந்து மாதமாக ஸ்பின்னிங் மில் முதலாளி அப்பாஸிடம் வேலை செய்து வருகின்றனர்.
ஆனால்,கடந்த ஒரு மாதமாக மில் முதலாளி அப்பாஸ் மகாலிங்கத்திடம் பணம் திரும்ப கேட்டு கடுமையாக நடந்து வருகிறார்.இதனால் மகாலிங்கம் நாங்கள் இந்த இடத்தில் இருந்து வேறு பக்கம் வேலைக்கு செல்கிறோம்.இந்த ஊரிலேயே உள்ள வேறு இடத்தில் வேலை செய்து உங்கள் பணத்தை கொடுத்துவிடுகிறோம் எனக் கூறியிள்ளார்.இதனால் இன்னும் கோவம் அடைந்த முதலாளி அப்பாஸ் நீங்கள் எங்கு வேணாலும் போங்கள் ஆனால் உங்கள் குழந்தைகளை பணம் கொடுக்கும் வரை வெளியில் விடமாட்டேன் என மறுத்துள்ளனர்.
இதனால்,மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி இவரது குழந்தைகள் கடந்த ஒரு சில மாதங்களாக இவர்கள் பணிபுரியும் ஸ்பின்னிங் மில் முதலாளி அப்பாஸிடம் குடும்பத்தோடு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.