December 8, 2020
தண்டோரா குழு
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவை மாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் இன்று நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் விரோத சட்டங்களை கண்டித்தும் அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக கடுங்குளிர் என்றும் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டும் மழையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.