• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொடி தயாரிக்கும் பணி மும்முரம்

January 24, 2020

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி தேசியக் கொடி தயாரிக்கும் பணி கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணி கோவையில் உள்ள காந்திஜி கதர் ஸ்டோர்ஸ் கடையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகை மதுரை,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து கொடி தயாரித்து அனுப்பபடுகின்றன. இதற்காக ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து கதர் துணிகள் வரவழைக்கப்பட்டு இக்கொடிகள் தயார் செய்யப்படுகின்றன. இக்கொடிகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும்
அனுப்பபடுகின்றன. கேரளாவில் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பபடுகின்றன. இதில் 30 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டு பெரிய கொடிகளும், 10 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டு சிறிய கொடிகளும் தயாரிக்கப்படுகின்றன. பெரிய கொடிகளில் 42 இன்ச்சில் அசோக சக்கரம் பொறிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு காட்டன்,கதர்,வெல்வட் துணிகளில் இக் கொடிகள் தாயார் செய்யப்படுகின்றன.

குடியரசு தினத்தை ஓட்டி சுமார் ஒன்றரை லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பபடுகின்றன.

கொடி தயாரிக்கும் பணி குறித்து பேட்டியளித்த பணியாளர் ராஜேந்திரன்,

பொதுவாக அரசியல் கட்சிகளுக்கும் அமைப்பினருக்கும் பல்வேறு கொடிகள் நாங்கள் தயார் செய்து கொடுத்தாலும் தேசியக்கொடி தயாரிக்கும்போது மட்டும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தினத்தையொட்டி இரவு பகல் பாராமல் தொடர்ந்து கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். பொதுவாக குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதிகமான கொடிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க