• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொங்கு நண்பர்பர்கள் குழு அமைப்பிற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தீவைத்த மர்ம நபர்

May 9, 2019 தண்டோரா குழு

கோவையில் கொங்கு நண்பர்பர்கள் குழு அமைப்பிற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மற்றொரு ட்ராவல் நிறுவன வாகனத்திற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அங்கமான கொங்கு நண்பர்கள் குழு என்ற அமைப்பின் சார்பில் மாருதி ஆம்னி வேனை கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் நல்லாம்பாளையம் தென்றல் நகர் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தில் வழக்கமாக நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தீ வைத்து சென்றுள்ளார்.

மேலும் அதன் அருகே உள்ள நான்கு சக்கர வாகன பணிமனை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அருண் பிராங்கிளின் என்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான டெம்போ ட்ராவலர் வாகனத்திற்கும் அந்த நபர் தீ வைத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.கொழுந்து விட்டு எரிந்த தீ இரண்டு வாகனங்களையும் முற்றிலும் சேதப்படுத்தியது. இதில் இரண்டு வாகனங்களும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி உள்ளது.இதை தொடர்ந்து இன்று காலை ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமையாளர்களான சொந்தமான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு நண்பர்கள் குழு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் டிராவல்ஸ் வாகன உரிமையாளர் அருண் பிராங்க்ளின் உள்ளிட்டோர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மனு அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் நடைபெற்ற நல்லாம்பாளையம் தென்றல் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்துள்ள காவல்துறையினர் அந்த நபரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க