• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கேஸ் சிலிண்டரை லாவகமாக திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சி

December 30, 2019

டீசல் உள்ளிட்ட பெட்ரோல் கேஸ் எரி பொருட்கள் விலை சமீபத்தில் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் வாகனங்களை திருடி வந்த திருடர்கள் பின் வாகனத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் திருடி வந்தனர்.

இந்த நிலையில் ஒரு படி மேலே போய் வீட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட சிலிண்டர் கேஸ்ணை திருடும் திருடர்கள் அதிகமாகி வருகின்றனர்.

கோவையில் அப்புசாமி லேஅவுட் அருகே புளியகுளம் முதல் ரேஸ்கோர்ஸ் போகும் சாலையில் இண்டன் சிலிண்டர் விநியோகஸ்தர் ஒருவர் தனது வாகனத்தில் சிலிண்டரை எடுத்துவந்து விநியோகம் செய்வதற்காக சில சிலிண்டரை வண்டியில் வைத்து விட்டு சிலவற்றை எடுத்து மாடி மேலே செல்கிறார், விநியோகஸ்தர்ஐ பின்தொடர்ந்த திருடர்கள் சற்று லாவகமாக அவர் மேலே சென்றவுடன் அந்த சிலிண்டரை திருடிச் செல்கின்றனர்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வெளியாகியுள்ள சிசிடிவி யின் அடிப்படையில் சமையல் கேஸ் விலை உயர்வை காட்டுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க