• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கேட் மீது பைக் மோதி போலீஸ்காரர் உயிரிழப்பு

December 5, 2020 தண்டோரா குழு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி திரு வி க நகரைச் சேர்ந்தவர் அந்தோணி.இவரது மகன் அருள் ஆனந்த் வயது 30. இவர் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க பைக்கில் வந்திருந்தார். இன்று காலையில் ஊருக்கு திரும்பும்போது சிங்காநல்லூரில் உள்ள ரிலையன்ஸ் டவர் கேட் மீது பைக் மோதியது இதில் அருள் ஆனந்த் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மணி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க