March 12, 2018
தண்டோரா குழு
கோவையில் கெயில் திட்டம் மூலம் எரிவாயு குழாயை விவசாய நிலத்தில் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிவாயு குழாய் மாதிரியுடன் விவசாயிகள் இன்று(மார்ச் 12)மனு அளித்தனர்.
தமிழகத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில் கோவையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று எரிவாயு குழாய் மாதிரியுடன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்க வந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் தலைவர் சு.பழனிசாமி,
கொச்சி, பெங்களூரு, குஜராத் அகமதாபாத் காந்தி நகர் போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலை வழியாகவே எரிவாயு கொண்டு செல்லப்படுவதாக கூறிய அவர் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மீண்டும் உத்தரவு போடுவதை ஏற்க முடியாது என்றார்.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் பாதிப்படுவார்கள் என தெரிவித்தார்.எரிவாயு குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடத்தில் விவசாயிகள் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.