March 1, 2018
தண்டோரா குழு
கோவையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக உதயம் என்ற புதிய தன்னார்வ அமைப்பை இருப்பு பாதை காவல் துறையினர் இன்று துவங்கி உள்ளனர்.
குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை தற்போது அதிரித்து வரும் நிலையில் குழந்தைகள் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் உதயம் என்ற புதிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கோவை இருப்பு பாதை காவல் துறையினர் அறிமுகம் செய்து துவங்கி உள்ளனர்.
இதில் ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், போர்டர்கள், வெண்டர்கள் இணைந்து கொண்டு குழந்தை கடத்தல், அல்லது துன்புறுத்தல்களை கண்டால் உடனடியாக ரயில்வே காவல் துறையினர் அல்லது குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு,அவர்களுக்கு அடையாள அட்டையை தமிழ்நாடு இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ் வழங்கினார்.
மேலும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்துள்ள ஓட்டுநர்கள், பணியாளர்களுக்கு அதற்கான அடையாள அட்டையை தமிழ்நாடு இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர்,
குழந்தைகள் வீட்டை வெளியேறினாலோ, கடத்தப்பட்டலோ ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர், ஆனால் அனைத்து இடத்தையும் கண்காணிக்க போலீஸாரால் மட்டும் முடியாது, ஆனால் இதே இரயில் நிலையத்தில் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், போர்டர்கள், வெண்டர்கள், என அனைத்து பணியாளர்களும் உள்ளனர். இவர்கள் ஒத்துழைப்பு இருந்தால் 100% குழந்தைகள் கடத்தல் வன்கொடுமை தடுக்கப்படும்.
தற்போது கோவையில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 200 குழந்தைகளை ரயில்வே போலீஸார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.