• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குழந்தைகளுடன் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்

January 16, 2020 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் குழந்தைகளுடன் திருவள்ளுவர் தினத்தை வெளிநாட்டு மாணவர்கள் கொண்டாடினர்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மேற்கு இணைந்து திருவள்ளுவர் தின திருவிழாவை நடத்தின. “திருக்குறளை சேமிப்போம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மேற்கு தலைவர் ஜெயகாந்தன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக்கொண்டு திருக்குறளை கூறி அசத்தினர். பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் உண்டியல் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன்,

திருக்குறள் தமிழர்களின் அடையாளம். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது. சமஸ்கிருதத்தை விட மிக பழமையான மொழி தமிழ் என்று நம் பாரத பிரதமரே கூறியுள்ளார். மேலும் தமிழை கற்க ஆர்வமாக உள்ளதாக பிரதமர் கூறியிருக்கிறார். தாய் மொழி கண்களை போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றது. தாய் மொழியின் பெருமையை பெற்றோர் கற்று தர வேண்டும். குழந்தைகளுக்கு வாழ்க்கையில் நேர்மையை கற்றுக்கொடுங்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் மற்றும் பிரேசிலை சேர்ந்த மாணவர்கள் ஜூலியன், பவுத்திசான், கிளாஸ் ஆகியோர் திருக்குறள் கூறி வானதி சீனிவாசனிடம் இருந்து உண்டியலை பரிசாக பெற்றனர்.

மேலும் படிக்க