• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குறையும் கொரோனா தொற்று; முதல்வருக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் பெரியகருப்பன்

June 9, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இதற்கிடையே, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், கிட்டாம்பாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டவர், கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சைகள் தொடர்பாக விசாரித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கணியூர் ஊராட்சி அலுவலகத்தில், முன்கள பணியாளர்கள் 400 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதற்கட்டமாக 25 பேருக்கு நிவாரணம் வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் கோபால், இயக்குநர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஒரு மாதத்தில் உச்சத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு 50% குறைந்துள்ளது. முதல்வரின் முயற்சிகளால் இவை சாத்தியமாகி உள்ளது. மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நகர் மட்டுமல்லாமல் ஊரக பகுதியிலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை உணர்ந்து, முதல்வர் கோவை மாவட்டத்திற்கு முக்கியதுவம் அளித்து ஊரக அமைச்சர் மட்டுமின்றி செயலர்களையும் அனுப்பி உள்ளார்.

அந்த அடிப்படையில் கோவை ஊரக பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். விரைவில் ஊரக பகுதியிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் இன்னும் சில வாரங்களில் கொரோனோ இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். கோவை மாவட்டம் புறக்கணிப்படுவதாக அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் அப்படி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக முதல்வர் இரண்டு முறை கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் உயிரை பற்றி கூட கவலை படாமல் கொரோனா சிகிச்சை மையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அரசியலுக்கு அப்பாற்பட்ட முதல்வராக, பலி வாங்கும் எண்ணம் இல்லாத முதல்வராக இப்போதைய முதல்வர் செயல்படுகிறார் என்றார்.

மேலும் படிக்க