• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குப்பையை எடுக்கச்சொன்னால் குப்பைதொட்டியையே எடுத்துச்சென்ற அதிகாரிகள்

September 28, 2019

கோவை பூங்கா நகரில் குப்பையை எடுக்கச்சொன்னால் குப்பைதொட்டியையே மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்பு கடை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பூங்கா நகர் ,கரும்பு கடை முக்கிய சாலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் ஊழியர்கள் வருவதில்லை. குறைவான ஊழியர்களால் முழுமையாக தூய்மை பணி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் விளக்கமளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் குப்பை எடுக்க சொன்ன பகுதியில் குப்பைகளை எடுத்து விட்டு , தொட்டியையும் எடுத்துச்சென்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நொய்யல் ஆற்று கரையில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க