• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக தேசியகொடியை வீடுகளில் ஏற்றி போராட்டம்

February 18, 2020

இந்தியா முழுவதும் இரண்டு மாதத்திற்கு மேலாக குடியுரிமை சட்டத்திருத்ததை திரும்பபெறக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி மற்றும் தமிழகத்தில் சி ஏ ஏ என் ஆர் சி க்கு எதிராக போராடுபவர்கள் மீது காவல் துறை தாக்குதலை கடைபிடித்து வருவதை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியிலுள்ள வீடுகளில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனதை அரசுக்கு உணர்த்தவே இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க