May 11, 2021
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நல்ல பாம்பை பிடித்த காவலருக்கு பாராட்டு குவிகிறது.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் பாபு. இவர் இன்று காலை செல்வபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அந்த பகுதியில் உள்ள சாஸ்தா நகரில் குடியிருப்பு வீடுகள் உள்ளது. அங்கு திடீரென பொதுமக்கள் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த காவலர் பாபு உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே நல்ல பாம்பு இருப்பது தெரிய வந்தது. அதனைதொடர்ந்து அந்த நல்ல பாம்பை லாவகமாக கையாண்டு அந்தப் பாம்பை உயிருடன் பிடித்தார். பிறகு அதை கொண்டு சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டு வந்தார்.
இந்த நிகழ்வை பார்த்த பொதுமக்கள் காவலருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.