• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிநீர் விநியோகம் நாளை தடை

August 7, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு நீரேற்று நிலையம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினரால் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாலும், மேற்படி வெள்ளியங்காடு நீரேற்று நிலையத்தில் உள்ள கட்டமைப்புகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் வரும் 8ம் தேதி காலை 9 மணி முதல் 9ம் தேதி மாலை 6.00 மணி வரையிலும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க