• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கீவா ஸ்கின் மற்றும் ஹேர் க்ளீனிக் துவக்கம்..!

August 30, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆண்,பெண் இரு பாலாருக்குமான சருமம் மற்றும் முடி சம்மந்தமான அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்கும் கீவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கை கோவையை சேர்ந்த பிரபல உடல் நல நிபுணர் டாக்டர். ஜெயா மகேஷ் துவக்கி வைத்தார்.

15 ஆண்டுகளாக முடி மற்றும் சரும சிகிச்சைகள் வழங்கிவரும் நிபுணர்கள் சுகந்தி மற்றும் தேவி ஆகியோரால் இந்த க்ளீனிக் நிறுவப்பட்டது.

இந்த கிளினிக் குறித்து டாக்டர்.ஜெயா மகேஷ் அவர்கள் கூறுகையில்

“நம்மை ஒருவர் சந்திக்கும் போது நம் முகத்தைத்தான் முதலில் கவனிக்கிறார்கள், எனவே நாம் அதை பொலிவுடணும், இளமையாகவும் பராமரிப்பது அவசியம்,” என்றார்.மேலும்,”சுருக்கங்கள் இல்லாத, மென்மையான சருமம் பெற கீவா சிகிச்சைகளை வழங்குகிறது. இன்று இந்த கிளினிக்கை தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,”என்று கூறினார்.

கீவா கிளினிக் குறித்து இதன் நிறுவனர்களான சுகந்தி மற்றும் தேவி கூறுகையில் ,

‘கீவா’ ஸ்கின் & ஹேர் கிளினிக்கை ஆர்.எஸ்.புரம் பகுதியில் துவங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. கீவா கிளினிக்கில் அனைத்து சருமம் மற்றும் முடி சம்பந்தமான சேவைகளை சுகாதாரமான மற்றும் வலியற்ற முறையில் நிபுணர்களின் ஆலோசனை படி வழங்குகிறோம்.

ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானவை. வாடிக்கையாளர்களின் தேவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருக்கும், எனவே இங்கு தனிநபரின் தேவைக்கேற்ப சேவைகளை இங்கு வழங்குவோம்.கீவாவில் தரமான தோல் நல சிகிச்சைகளை வழங்கு ஒரு பிரத்தியேக தோல் மருத்துவரைக் கொண்ட முழுமையான தோல் மற்றும் முடி பராமரிப்பு மையமாகும்.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான முக மற்றும் முடி சம்பந்தமான தேவைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அவரவர் சருமத்திற்கு ஏற்ற வகையில் சிகிக்சை அளிக்கப்படுகிறது. திறப்பு விழா சலுகையாக செப்டம்பர் இறுதி வரை இந்த க்ளினிக்கிற்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றனர்.

மேலும் படிக்க