• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி

January 5, 2024 தண்டோரா குழு

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இடம்பெற்றுள்ளன. சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.

ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 40 கார்கள் வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள் வழியாக சென்றது.சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.பழைய மாடல் பென்ஸ், ரோஸ் ரோல்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன் கார்கள் பழைய ஜீப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் 60 வருட பழமையான பார்ப்பதற்கு அரிய கார்கள் மற்றும் பைக்குகளை காட்சிப்பட்டு இருந்ததை குழந்தைகள்,பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

மேலும் படிக்க