• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிறித்துவர்கள் அமைதி போராட்டம் !

January 25, 2022 தண்டோரா குழு

கோவையில் தேவாலயதிலுள்ள புனிதர் செபாஸ்டியரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிறித்துவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி் பேசும் கிறுஸ்துவ மக்கள் வழிபடும் டிரினிட்டி ஹோலி தேவாயலம் உள்ளது. கொரனா பரவல் காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கு கடைபிடிக்கபட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணபட்ட இந்த தேவாலயத்தில் செக்யூரிட்டி ஜான்சன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இரவு 10 மணி அளவில் தேவலாயத்தின் வளாகத்தில் கண்ணாடி உடைத்த மர்ம நபர்கள் கண்ணாடியை கட்டையால் அடுத்து உடைத்ததுடன் உள்ளே இருந்த புனித செபாஸ்டியன் சிலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சத்தம் கேட்டு ஜான்சன் சென்று பார்த்தபோது தலைகவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் தேவாலயத்தில் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்த புனித செபாஸ்டியரின் சிலையை கட்டையால் உடைத்து கொண்டிருந்த்தை பார்த்து அதிர்ச்சியடைத்து கூச்சலிட்டுள்ளார்.

ஜான்சனின் சத்தம் கேட்டு பாதிரியார் வருவதற்குள் அந்த மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் தயாரக இருந்த மற்றொரு நபரும் ஏறி தப்பினார். இதில் செபாஸ்டியர் சிலை மற்றும் அதனைச்சுற்றி வைக்கபட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த்து. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அத்தேவாலயத்தின் கிறித்தவ மக்கள் அமைதி வழியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவையில் வசிக்கும் கிறித்துவ சிறுபான்மையினர் வழிபடும் தேவாலயத்தில் சிலை உடைக்கபட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.இதுபோன்ற சட்ட விரோத செயலின் மூலம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பிரச்சனையை துண்டும் விதமாகவும் செயல்பட்ட மர்ம நபர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க