May 8, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் ரூ.184.75 இலட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயலாக்கத்துறை அமைச்சர்
துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ரூ.20.00 இலட்சம் மதிப்பிலான ஒரு வஜ்ரா இயந்திரமும், ரூ.39.75 இலட்சம் மதிப்பிலான டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள் மூன்றும், ரூ.10.00 இலட்சம் மதிப்பிலான ஜாக்டோ டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள் மூன்றும், ரூ.115.00 இலட்சம் மதிப்பிலான ஜெட்டிங் இயந்திரங்கள் இரண்டும் ஆகமொத்தம் ரூ.184.75 இலட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மருந்து
தெளிக்கும் வாகனங்களின் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி, மாநகராட்சி
ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத்,மாநகராட்சி துணை ஆணையாளர் .ச.பிரசன்னா ராமசாமி,மாநகரப் பொறியாளர் திரு.ஆ.இலட்சுமணன், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.