• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிரிமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் திரையரங்கு பணியாளர்கள்

August 22, 2021 தண்டோரா குழு

நாளை முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திரையரங்குகளில் கிரிமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் திரையரங்கு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இந்நிலையில் நேற்று தமிழக அரசு திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியக் அளித்ததுடன் அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்திருந்தது.

இதனடிப்படையில் கோவையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு அமரும் விதமாக இருக்கைகளில் குறியீடுகள் அமைப்பது, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் பாலசுப்ரமணியம் கூறும்போது,

கடந்த கொரனா அலைபரவல் காரணமாக 18 மாதங்களாக திறையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூடப்பட்டிருந்தது இரண்டாம் அலை பரவலால் கடந்த 3 மாதங்கள் மூடப்பட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தால் பாதிக்கபட்ட திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற அரசின் அனுமதிக்காக காத்திருந்ததுடன் அன்றாடம் சுமார் 13 பணியாளர்களை கொண்டு திரையரங்கு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

மேலும் படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை முக கவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது மற்றும் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சரி பார்ப்பது என பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.மேலும் திரையரங்கு டிக்கெட் கட்டணம் என்பது உயர்த்தபடாது என தெரிவித்தவர் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கபடும் என்றார்.

மேலும் கொரனா அலை பரவல் காரணமாக நஷ்டத்தை சந்தித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க