• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

March 31, 2022 தண்டோரா குழு

கியாஸ் விலை உயர்வுவை கண்டித்து கோவையில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு விலை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டர்க்கு பாடை கட்டி கண்டன் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கேஸ் விலையை உயர்த்தக்கூடாது. பெட்ரோல் விலை விலையை உயர்த்தக்கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க