• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை

June 24, 2019

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்பு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜிம் வீட்டின் உள்ளே உறங்கச்சென்றார்.வீட்டின் வெளியே வந்திருந்த உறவினர்களில் சிலரும் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை இரண்டரை மணியளவில் பாத்ரூம் செல்வதற்காக எழுந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார். இன்று காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பு எதாவது விளையாடிக்கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர். அருகில் எங்காவது இருக்குமா எனவும் உறவினர்கள் மற்று கனகராஜிம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.வீட்டிலிருந்து 500மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப்பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்கு உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க