March 4, 2018
தண்டோரா குழு
கோவை தனியார் மருத்துவமனையின் சார்பாக கிட்னி தான மாரத்தான் போட்டி இன்று(மார்ச் 4) நடைபெற்றது.
இந்தியா முழுவதும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் மகளிர் தினத்தையொட்டியும் உடல் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும் கிட்னி தானத்தையொட்டியும்,கோவை டாடாபாத்தில் உள்ள தனியார் கிட்னி மருத்துவமனை சார்பாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியானது வடகோவை மேம்பாலம் முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வரை சுமார் 5கிலோமீட்டர் தூரம் வரை சென்று முடிவடைந்தது.இதில் 12முதல் 16வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்,பெரியவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.