• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காஷ்மீர் போன்று குளு குளு பனிக்கட்டி பூங்கா துவக்கம் !

March 4, 2020 தண்டோரா குழு

கோவை புரூக்பீல்டு மாலில் பேன்டசி பார்க் நிறுவனத்தின் சார்பில், ஸ்னோ பேன்டசி என்ற பனிக்கட்டி பூங்கா வரும் மார்ச் 6 ம் தேதி ஸ்னோ பேன்டசி என்ற பெயரில் துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பேன்டசி பார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கேப்டன் டி.எஸ் அசோகன், இயக்குனர்கள், டி.எஸ் விஜயன், விபின் ஸ்கரியா மற்றும் சிபின் ஸ்காரியா ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்,

பாலக்காட்டில் உள்ள பேன்டசி பார்க் கடந்த 25 ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இது கேரளாவின் முதல் மற்றும் தென்னிந்திய அளவில் இரண்டாவது அம்யூஸ்மென்ட் பூங்காவாகும். பாலக்காட்டில் உள்ள மலம்புழாவில் அமைந்துள்ள இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற பேன்டசி பார்க் ஆகும். கொச்சியில் ஸ்னோ பேன்டசி பார்க்கும், மற்றொன்று கோழிக்கோட்டில் புகழ்வாய்ந்த ஹிலைட் மாலிலும் அமைந்துள்ளது. இது இந்தியாவில் முதன்மையான ஸ்னோ பார்க்குகளில் ஒன்றாக 2018 ல் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் சிறந்த செயல்பாடுகளினால் காலத்தில் பல்வேறு பாராட்டுக்களுக்கும் விருதுகளும் எங்களது கிடைத்துள்ளது. இதன் கிளையை ஸ்னோ பேன்டசி நிறுவனத்தினர், கோவையில் உள்ள புரூக்பீல்டு மாலில் வரும் மார்ச் 6 ம் தேதி துவக்கவுள்ளளோம்.

ஸ்னோ பேன்டசியை போன்றே புரூக்பீல்ட்ஸ் மாலுக்கு வரும் அனைத்து வயதினரும் பனிக்கட்டி சூழ்ந்த கனவு உலகமாக இது திகழும். காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்விட்சர்லாந்து போன்ற பனிபிரதேச மலைகளுக்கு சென்று வரும் சூழலை இங்கு உருவாக்கியுள்ளோம். மேலும் சவாரிகள், டிஜே, மற்றும் லேசர் ஷோ, தொங்குபாலம், மரவீடு, குடில், மினி காபிக்கடையில் சூடான டீ, காபி மற்றும் சூப் வகைகளும் கிடைக்கும். கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது. ஸ்னோபால் சண்டைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கற்பனை திறன் இருக்குமானால், தனியாக ஒரு பனிக்கட்டியில் உருவங்களையும் பனி மனிதனையும் உருவாக்கலாம். இளம் தலைமுறையினருக்காக உருவாக்கப்பட்டுள்ள சாகச அமைப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கவலையின்றி விளையாட, பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பனி பூங்காவானது சுமார் 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. பனி பொழியும் பகுதி சுமார் 12 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஷோவுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்றவுடன் மைனஸ் 3 டிகிரி குளிர் இருக்கும், இது போக போக மைனஸ் 10 டிகிரியாக குறைக்கப்படும். இங்கு ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 250 முதல் 300 பேர் வரை இங்கு விளையாடி மகிழலாம். இதன் உள்ளே நுழையும் பொழுது பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கவச ஆடைகள், கையுறை, காலனிகள் வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணமாக 90 சென்டி மீட்டர் உயரம் வரை உள்ளவர்களுக்கு அனுமதி இலவசம், 140 சென்டி மீட்டர் வரை உயரம் உள்ளவர்களுக்கு ரூபாய் 480.00 கட்டமாகவும், 140 சென்டி மீட்டருக்கு மேல் உயரம் உள்ளவர்களுக்கு ரூபாய் 550.00 கட்டணமாகும். இந்த (பனி பூங்கா) ஸ்னோ பார்க் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். பள்ளி, கல்லூரிகள் முன் கூட்டியே முன்பதிவு செய்தால், தகுந்த நேரம் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க