April 27, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று(ஏப் 27)உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட போட்டோ ஸ்டுடியோ அசோசியேஷன் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோக்கள் சுமார் 65 மற்றும் 15 கலர் லேப்கள் மூடப்பட்டுள்ளது.
மேலும்,உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து ஸ்டுடியோ உரிமையாளர்கள்,பணியாளர்கள் பங்கேற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.