April 2, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி திமுகவினர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று(ஏப் 2)ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில்,உள்ள ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தினால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.மேலும்,காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.