• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல்துறையின் சவாலான பணிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

September 16, 2022 தண்டோரா குழு

தீத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவிகள்
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துணைத் தலைவர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் கூறுகையில்,

கோவை மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தைகளுகாகவும் பெண்களுகாகவும் பாலியல் குற்றம் தடுப்பதற்காக இது போன்ற நிகழ்வு நடைபெறுகிறது முதல் பகுதியாக ஒரு லட்சம் மாணவ மாணவியர்களுக்கு தைரியம் ஊட்டுவதற்கு காவல்துறை உங்கள் நண்பன் தான் a day with police நிகழ்வு கடந்த வாரம் இதனை ஆரம்பித்தோம். அரசு பள்ளியில் மாணவர்கள் காவல்துறையுடன் ஒரு நாள் ஆயுதப்படையில் இருக்கக்கூடிய துப்பாக்கி ஆயுதம் தெரிந்து கொள்ளும் வகையிலும் தைரியம் ஊட்டும் விதமாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். அரசு பள்ளி மாணவர்கள் 30 பேர் வந்துள்ளனர்.

மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த குற்ற வழக்கில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுப்பதற்காகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் எங்களுக்கு உறு துணையாக உள்ளனர் அதே போல பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம் மேலும் போதை பொருள் தடுக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்தில் நான்கு நடத்துனர்கள் இருப்பது தவறில்லை தவறு நடக்கும் பட்சத்தில் தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

மேலும் படிக்க