June 26, 2018
தண்டோரா குழு
கோவையில் லாரியில் ஏற்றி சென்று கொண்டு இருந்த இரும்பு ராடு கார் மீது திடீரென விழுந்ததில் காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இரும்பு ராடு காருக்குள் சென்றது.காரின் பின் இருக்கையில் யாரும் பயணிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவையை அடுத்த ராம் நகர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளது.இந்த தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு ராடை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரும்பு ராடு ஒன்று லாரியில் இருந்து கீழே விழும் பொழுது அவ்வழியாக வந்த காரின் மீது விழுந்ததில் அந்த காரின் பின்பக்க ஐன்னல் உடைக்கப்பட்டு காருக்குள் இரும்பு ராடு சென்றது.இதனால் கார் சேதமடைந்தது.
இதனையடுத்து உடனடியாக காரை ஓட்டுனர் காரை நிறுத்தினார்.காரின் பின் பக்கம் யாரும் பயணிக்காததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.இந்த பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும்,பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுவதாக பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் வைத்தனர்.