August 20, 2021
தண்டோரா குழு
இந்த வருடம் ஓணம் பண்டிகையில் கோவையில் காய்கறிகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.ஆனால் கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கேரள எல்லையோரத்தில் உள்ள கோவையில் இருந்து அத்தியாவசியப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
இது குறித்து கோவை டி.கே.மார்க்கெட் காய்கறிகள் வியாபாரிகள் சங்க தரைவர் ராஜேந்திரன் கூறுகையில்,
கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறிகள் கடந்த ஆண்டுகளை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளதாகவும்,இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காய்கறி பொருத்தவரை கோவையில் இருந்து டன் கணக்கில் கடந்த வருடம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வருடம் காய்கறிகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை என கவலை தெரிவித்தார்.இந்த வருடம் ஓணம் பண்டிகையில் கோவையில் காய்கறிகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.