• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காப்பு காட்டில் பெண் யானை இறப்பு

June 19, 2023 தண்டோரா குழு

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைகட்டி மத்திய சுற்றுக்குட்பட்ட தூமனூர் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர்.அப்போது ஆனைகட்டி தெற்கு காப்பு காட்டிற்கு வெளியே 300மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பது ரோந்து பணியின்போது கண்டறியபட்டது.

இதனை அடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவ அலுவலரால் அந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

யானைகளுக்குள் சண்டை ஏற்பட்டதா? அல்லது நோய் வாய்பட்டு பெண் யானை இறந்துள்ளதா? என பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை வந்த பிறகே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க